தமிழகம் முழுவதும் மளிகை கடை, பெட்டிக்கடைகளுக்கு 'கட்டம்' கட்டும் தமிழக போலீஸ்.! அடுத்தடுத்து சிக்கும் கடைக்காரர்கள்.! - Seithipunal
Seithipunal


கடந்த 24 மணி நேரத்தில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டவிரோதமாக குட்கா விற்பனை செய்த பெட்டிக்கடை, மாளிகைக் கடைக்காரர்களை 23 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டவிரோதமாக குட்கா பொருட்களை விற்பனை செய்வதை கண்காணிக்க மற்றும் நடவடிக்கை எடுப்பதற்காக 7 தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இவர்கள் மாவட்டம் முழுவதும் சோதனையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். அதில், கடந்த 24 மணி நேரத்தில் சங்கராபுரம் அருகே குட்கா பொருட்கள் விற்பனை செய்த 3 கடைகள், உளுந்தூர்பேட்டை பகுதியில் ஐந்து கடைகள் சீல் வைக்கப்பட்டன.

மேலும், கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர். இதேபோல், சூளாங்குறிச்சி பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 67 கிலோ குட்கா பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் நகரப் பகுதியில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படும் குட்கா, புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 23 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல், திருச்சியில் பெட்டிகடையில் குட்கா-புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முசிறி அருகே பெட்டிகடையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் பெட்டி கடை ஒன்றில் சோதனை நடத்தி தங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பெட்டிக்கடைக்காரரிடம் விசாரணை நடத்தியதில், அவர் நாமக்கல்லில் இருந்து மொத்தமாக வாங்கி வந்து விற்பனை செய்வதாக தெரிவித்து உள்ளார். இதேபோல் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

மளிகை கடை மற்றும் பெட்டிக்கடைகளில் குட்கா பொருட்கள் விற்பனை செய்தால் கடைக்கு சீல் வைத்தும், பொருட்களை பறிமுதல் செய்தும், கடைக்காரர்களின் மீது வழக்குப்பதிவு செய்தும் போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Police action for gutka


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->