எய்ம்ஸ்க்கு நிதி எங்கே.? ஒற்றை செங்கலுடன் டெல்லியில் போராட்டத்தில் குதித்த தமிழக எம்.பிக்கள்.!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த 2015-இல் பிப்ரவரி மாதம் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி அமைக்கப்படுவதற்கான அறிவிப்பு வெளியாகியது. இதற்காக மதுரை தோப்பூரில் இடம் தேர்வு செய்யப்பட்ட நிலையில், 2019-ல் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 

நான்கு ஆண்டுகளாகியும் இதன் கட்டுமான பணிகளுக்கு தேவையான நிதிகளை ஒதுக்காமல் மத்திய அரசு தாமதித்து வருகின்றது. நேற்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் 2023 பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கியது. இன்று இதற்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

அதில் பல்வேறு அம்சங்கள் இடம் பெற்ற நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட நிதி ஒதுக்கப்படவில்லை. இதனை தொடர்ந்து, நாடாளுமன்ற தமிழக எம்பிக்கள் போராட்டத்தில் குதித்தனர். 

நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு முன்பாக கையில் எய்ம்ஸ் என்று எழுதப்பட்டிருந்த செங்கலை ஏந்தியவாறு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்து அவர்கள் போராட்டம் செய்தனர். இதில், தமிழக எம்பிக்களான விஜய் வசந்த், கார்த்தி சிதம்பரம், மாணிக்கம் தாகூர், செல்லகுமார், சு. வெங்கடேசன், ஞான திரவியம் மற்றும் கவாஸ்கனி ஆகியோர் பங்கேற்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tn MPs Protests For Aims In Parliament


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->