#BREAKING: உள்ளாட்சி தேர்தல் குறித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில், உள்ளாட்சி தேர்தலை நடத்தக் கோரும் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தமிழக அரசு கலந்த வாரம் ஒரு பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தது.

அதில், வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டியுள்ளது. "நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதால் வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையத்தில் இருந்து மாநில தேர்தல் ஆணையம் பெறமுடியவில்லை, எனவே உள்ளாட்சி தேர்தலை தற்போது நடத்த முடியாத சூழ்நிலை உள்ளது.

தூய்மை காவலர்கள் திட்டத்தின் மூலம் தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. குடிநீர், மின்சார விநியோகம், தெருவிளக்குகளை சரிசெய்தல், சுகாதாரப் பணி உள்ளிட்டவைகளுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளது.

இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலுக்கான மாவட்ட தேர்தல் அதிகாரிகளை நியமிக்க  மற்றும் உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்காளர் பட்டியலை தயார் செய்வதற்கான தமிழக அரசு அரசாணை  வெளியிட்டுள்ளது. 

வாக்குச் சாவடிகள் அமைப்பது உள்ளிட்டவை குறித்த வழிமுறைகள் குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn govt new order in local body election


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->