ஆளுநர் விவகாரம் | நாளை குடியரசு தலைவரை சந்திக்கும் திமுக மக்களவை குழு! - Seithipunal
Seithipunal


இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று முன்தினம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அப்போது ஆளுநர் ஆர்.என் ரவி, தமிழக அரசால் வழங்கப்பட்ட உரையில் சில பகுதிகளை வாசிக்காமல் தவிர்த்தார். 

குறிப்பாக திராவிட மடல், தமிழகம் அமைதி பூங்கா, பெரியார் உள்ளிட்ட வார்த்தைகளை ஆளுநர் வாசிக்காமல் தவிர்த்தார்.

ஆளுநர் உரை முடிந்தவுடன், ஆளுநரை கண்டிக்கும் வகையில் முதல்வர் மு.க ஸ்டாலின் ஆளுநர் உரையில் இடம் பெற்றுள்ள அனைத்து வார்த்தைகளையும் அவை குறிப்பில் சேர்க்க வேண்டும் என்ற தீர்மானத்தை கொண்டுவந்து நிறைவேற்றினார்.

அதே சமயத்தில் முதல்வர் ஸ்டாலின் தீர்மானத்தை வாசிக்கும் போதே, அவையிலிருந்து ஆளுநர் வெளியேறினார். 

சட்டப்பேரவையில் முதல்வரும், ஆளுநரும் நடந்துகொண்ட விதம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை மாற்றக் கோரி குடியரசு தலைவரிடம் நேரில் முறையிட திமுக முடிவு செய்துள்ளது.

நாளை காலை 11.45 மணிக்கு டி. ஆர் பாலு தலைமையிலான திமுக மக்களவை குழு குடியரசு தலைவரை சந்திக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Governor Issue DMK Meet president


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->