தமிழக ஆளுநர் விவகாரம் : சென்னையில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்! - Seithipunal
Seithipunal



தமிழக ஆளுநர் ஆர் என் ரவியை கண்டித்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், போலீசருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தால் தொடர் தற்கொலை சம்பவங்கள், குற்றச் செயல்களும் அதிகரித்த நிலையில், அதனை தடை செய்வதற்காக தமிழக அரசு அவசர சட்டம் ஒன்றை இயற்றியது.

இந்த அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த போதும், அந்த அவசர சட்டம் காலாவதியானது. இதற்கிடையே தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிரான தடை சட்டத்திற்கு, தமிழக ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.

அதே சமயத்தில் ஆளுநர் எழுப்பிய கேள்விக்கு தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவதற்கு பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், பல்வேறு தரப்பில் இருந்தும் ஆளுநருக்கு கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

இந்த நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை அருகே சின்னமலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நடத்திய போராட்டத்தில் போலீசாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அப்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுப்புகளை தூக்கி, போலீசாரை தள்ளி விட்டு ஓடிய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நடத்திய இந்த ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் காரணமாக, அந்த பகுதியில் சிறிது நேரம் சாலை போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn governor issue chennai some protest


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->