திமுகவை வசமாக சிக்கவைத்த முதல்வர் பழனிசாமி! சட்டசபையில் திமுக திணறல்!  - Seithipunal
Seithipunal


கடந்த சில தினங்களுக்கு முன் காவிரி ஆற்றுப் படுகை மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பை வெளியிட்டார். அங்கு விவசாயத்தை பாதிக்கும் ஹைட்ரோகார்பன் மீத்தேன் பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையம் போன்ற எந்த திட்டத்திற்கும் அனுமதி அளிக்க மாட்டோம் என முதலமைச்சர் அறிவித்திருந்தார். 

இந்த அறிவிப்பிற்கு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற வார்த்தையை தமிழக அரசியலுக்கு அறிமுகப்படுத்திய பாட்டாளி மக்கள் கட்சி முதல் பல கட்சிகளும் வரவேற்று பாராட்டு தெரிவித்தனர். ஆனால் இந்த அறிவிப்பானது மக்களை ஏமாற்றும் அறிவிப்பு என திமுக தலைவர் மு க ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்தார். மேலும் இதனை அறிவிக்க வேண்டியது மத்திய அரசு தானே தவிர மாநில அரசு இல்லை எனவும் அவர் தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில் இன்று சட்டசபையில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கபட்டதற்கு நாடாளுமன்றத்தில் அதிக உறுப்பினர்களைக் வைத்துள்ள திமுக அனுமதி வாங்கி தர வேண்டுமெனவும், அதிமுக உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் சீட்டை தேய்த்து கொண்டிருக்கிறார்கள் என திமுக குற்றம்சாட்டியது நினைவில் இருக்கலாம் எனவும், தற்போது அதிக உறுப்பினர்களை வைத்திருக்கும் திமுக ஏன் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க அனுமதி வாங்கி தரக்கூடாது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். 

திமுக கூட்டணியில் தமிழகத்தில் இருந்து மொத்தம் 38 உறுப்பினர்கள் மக்களவையில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு திமுக தரப்பில் பதில் அளித்த துரைமுருகன் " டெல்டா மாவட்டங்களைல் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததற்கு திமுக சார்பில் வரவேற்பு தெரிவிக்கின்றோம். மீத்தேன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றி அதன் பின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திருந்தால் முழுமனதாக வரவேற்போம், மேலும் மத்திய அரசுடன் நாங்கள் எதிரும் புதிருமாய் உள்ளோம் நீங்கள் தான் இணக்கமாக  உள்ளீர்கள் என அதிமுக பக்கம் திருப்பி விட்டு நழுவிவிட்டார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN CM Edappadi Palanisamy ask help to dmk for protected agriculture zone in delta region


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->