5 மாநில தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நிலைமை என்ன தெரியுமா?! - Seithipunal
Seithipunal


நடந்து முடிந்த இந்த 5 மாநில சட்டமன்ற பொதுத் தேர்தலை பொறுத்தவரை, 5 மாநிலங்களிலும் பிரதானமாக எதிர்க்கட்சிகள் பாஜகவை விமர்சனம் செய்த தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டனர். 

மத்தியில் ஆளும் பாஜக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, பாஜகவின் எதிர்க்கட்சியாக உள்ள அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்தன. 

இருப்பினும், பஞ்சாப் மாநிலத்தை தவிர, மீதமுள்ள உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய 3 மாநிலங்களிலும் பாஜக ஆட்சி அமைப்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் பாஜக வளர்ந்து வரும் கட்சி என்பதால், தற்போது இரண்டு இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது.

அதேசமயத்தில், பாஜகவை கடுமையாக எதிர்த்து அரசியல் செய்து வரும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, கோவா மாநிலத்தில் மூன்று இடங்களில் முன்னிலை பெற்று பெற்றுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி போட்டியிடாத நிலையில், கோவா மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மூன்று இடங்களில் முன்னிலை பெற்று உள்ளது.

கோவா மாநிலத்தை பொறுத்தவரை பாஜக 19 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் 12 இடங்களிலும், ஆம் ஆத்மி இரண்டு இடங்களிலும், சுயச்சை மற்ற கட்சிகள் 4 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.

கோவா மாநிலத்தில் ஆட்சி அமைக்க 21 இடங்கள் பெரும்பான்மை வேண்டும் என்பதால், பாஜக சுயேச்சை  ஆதரவோடு ஆட்சி அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TMC 3 leading in goa


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->