நெல்லை அரசு உதவி பெறும் கிருஸ்துவ பள்ளி விபத்தில் கைது செய்யப்பட்ட தலைமையாசிரியர், தாளாளருக்கு ஜாமீன்.! - Seithipunal
Seithipunal


நெல்லை டவுன் பகுதியில் அரசு உதவி பெறும் கிருஸ்துவ பள்ளியின் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும், 3 மாணவர்கள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சதிஷ் - ஆறாம் வகுப்பு சி,  
விஸ்வயஞ்சன் - எட்டாம் வகுப்பு ஏ, 
அன்பழகன் - ஒன்பதாம் வகுப்பு பி, இந்த மூன்று மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த விபத்தில் 3 மாணவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பெற்றோர்கள் தரப்பிலும் மாணவர்கள் தரப்பிலும் வைக்கக் கூடிய மிகப் பெரிய குற்றச்சாட்டு என்னவென்றால், விபத்து நடந்தவுடன் பள்ளியின் ஆசிரியர்கள் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபடுவில்லை.

உடனடியாக ஆசிரியர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு இருந்தால் மாணவர்களின் உயிரை காப்பாற்றியிருக்கலாம் என்று பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இதன்காரணமாக, பள்ளி தலைமையாசிரியர், தாளாளர் மற்றும் கட்டிட ஒப்பந்ததாரர் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட பள்ளி தலைமையாசிரியர், தாளாளர் மற்றும் கட்டிட ஒப்பந்ததாரருக்கு ஜாமின் வழங்கியது நெல்லை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirunelveli School


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->