ஒரு மாவட்டமே, தினகரன் கட்சியில் இருந்து அதிமுகவில் ஐக்கியம்! அதிமுக வட்டாரத்தில் எழுந்த உற்சாகம்!  - Seithipunal
Seithipunal


நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் அமமுக சார்பில் வேட்பாளராகப் போட்டியிட்ட மைக்கேல் ராயப்பன், மாவட்டச் செயலாளர் பாப்புலர் முத்தையா உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட அமமுக நிர்வாகிகள்  மீண்டும் அதிமுகவில் இணைந்தனர்.

அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட தினகரன் அமமுக என தனி அணியாக செயல்பட்டார். எடுத்த வேகத்தில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக, திமுகவை தோற்கடித்ததன் மூலம் தினகரன் தமிழக அரசியலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டார்.

அதிமுகவில் அதிருப்தியில் இருந்த பலர் தினகரன் அணியில் இணைந்தனர். அவ்வாறு தினகரனுடன் இணைந்தவர்களில் முக்கியமானவர் நெல்லை மாவட்ட அதிமுக செயலாளராக இருந்த பாப்புலர் முத்தையா. அவரைப்போலவே தேமுதிக டூ அதிமுக பிரமுகர் மைக்கேல் ராயப்பன் தினகரனுடன் கைகோர்த்தார்.

மக்களவைத் தேர்தலில் தினகரன் தன் முழு பலத்தை காட்டுவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், முழுவதுமாக சொதப்பினார்கள். இந்தத் தேர்தலில் அமமுக குறிப்பிட்ட வாக்குகளை வாங்கினாலும் எதிர்பார்த்த அளவில் சோபிக்கவில்லை. 

இதனால் தற்போது அமமுகவுக்குள் இருப்பவர்கள் இடையே குழப்பம் உருவாகியுள்ளது. இந்நிலையில் டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளரும் நெல்லை வடக்கு மாவட்டச் செயலாளருமான பாப்புலர் முத்தையா, நெல்லை மக்களவைத் தொகுதியில் அமமுக வேட்பாளராக களமிறங்கிய மைக்கேல் ராயப்பன் உள்ளிட்டோர் இன்று அமமுகவிலிருந்து விலகி முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். தொடர்ந்து அமமுக நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்து வருவது தினகரனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tirunelveli ammk persons joined admk


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->