பாஜகவின் "உளவியல் ரீதியாக நெருக்கடி"... நள்ளிரவில் கொந்தளித்த திருமாவளவன்.!! - Seithipunal
Seithipunal


திமுக தலைமையிலான கூட்டணியில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தங்கி இருந்த வீட்டில் நேற்று இரவு வருமானவரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனை செய்தனர். 

இந்த சோதனைகள் எதுவும் கிடைக்காததால் வருமானவரித்துறை அதிகாரிகள் வெறும் கையுடன் திரும்பி சென்றனர். இதுகுறித்து நேற்று இரவு செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளருமான திருமாவளவன் பேசியதாவது "வருமானவரித்துறை அதிகாரிகள் திடீரென வந்து சோதனை செய்தார்கள். 

ஒவ்வொரு அறையாக ஒவ்வொரு பெட்டியாக திறந்து பார்த்தார்கள் என தகவல் கிடைத்தது. தமிழ்நாட்டிலேயே பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய, பொருளாதாரம் இல்லாத கட்சி விடுதலை சிறுத்தைகள்.‌ விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மக்கள் அளிக்கும் குடையை வைத்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். கடந்த 30 ஆண்டுகளாக நாங்கள் அப்படித்தான் இயங்கி வருகிறோம். 

தற்போது வரை நடைபெற்ற நாடாளுமன்ற சட்டமன்றத் தேர்தலின் போது வருமான வரித்துறை எங்களை சோதனை செய்ததாக வரலாறை கிடையாது. முதல் முறையாக இப்படி ஒரு நெருக்கடியை தருகின்றனர். பாஜகவும் சிதம்பரம் தொகுதியில் வேட்பாளரை நிறுத்தியுள்ளது. 

இந்த நிலையில் ஒரு வேட்பாளர் தங்கி இருக்கும் இடத்தில் எந்த ஒரு முகாந்திரமும் இல்லாமல் வருமான வரி துறையினர் சோதனை இடுவது ஒரு மறைமுகமான அல்லது வெளிப்படையான அச்சுறுத்தல் என்று கருத வேண்டி இருக்கிறது. உளவியல் அடிப்படையில் ஒரு தாக்குதல் நடத்துவதாக தான் புரிந்து கொள்ள இந்தியா முழுவதும் பிஜேபி மற்றும் பிஜேபி ஆதரவு சக்திகளிடம் வருமானவரித்துறையினரோ அமலாக்க துறையினரோ சோதனை நடத்தியதாக சான்று இல்லை. 

அதிகாரிகள் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். ஒரு கட்சி ஆட்சிக்கு வரும் பிறகு வேறு கட்சி ஆட்சிக்கு வரும் அரசியலில் இது சகஜமான ஒன்று. ஆளுங்கட்சியினர் ஏவுவதற்கு ஏற்ப செயல்படுவது அதிகாரிகளின் பொறுப்புக்கு உகந்ததல்ல. விடுதலை சிறுத்தைகள் கட்சி இரண்டே தொகுதிகளில் போட்டியிடுகிறது. 

எங்களுக்கு பொருளாதாரத்திற்கான எந்த வழியும் இல்லை, வாய்ப்பு இல்லை என்பது நாட்டு மக்களுக்கு தெரியும். வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு எப்படி தெரியாமல் போனது என்பது அதிர்ச்சியாக உள்ளது. இந்த நெருக்கடியை எல்லாம் நாங்கள் கடந்து தேர்தலை வெற்றிகரமாக முடிப்போம். 

மிகக் கடுமையாக பாஜக மற்றும் சங்பரிவார் அமைப்புகளை கொள்கை அடிப்படையில் விமர்சிக்கின்ற இயக்கமாக விடுதலை சிறுத்தைகள் இருப்பதினால் இது போன்ற அச்சுறுத்தல்களை தருகிறார்கள் என கருதுகிறேன். இது போன்ற அச்சுறுத்தல்கள் எமது பயணத்தை ஒருபோதும் தடை செய்யாது. அவர்களாக ஏதாவது கொண்டு வந்து வைத்து எடுத்தால் தான் உண்டு. அவ்வாறு செய்யாமல் இருந்தால் அதுவே நாங்கள் அவர்களுக்கு சொல்லக்கூடிய நன்றியாக இருக்கும். இது பன்ற வேட்பாளர்கள் தங்கும் இல்லத்தில் நேரடியாக சோதனை நடந்திருக்கிறதா என்பதை எனக்கு தெரியவில்லை. பாஜகவை எதிர்த்து பேசக்கூடாது, அரசியல் செய்யக்கூடாது என்பதற்காக இதுபோன்ற அச்சுறுத்தல்களை செய்கிறார்கள் என கருதுகிறேன்" என திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thirumavalavan alleged BJP give psychological distress by ITRaid


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->