திராவிடம் என்பது ஜீன் எனப்படும் குருதிவழி மரபினம் என்பது மானுடவியல் உண்மை - புது விளக்கம் கொடுக்கும் திருமாவளவன்.! - Seithipunal
Seithipunal


திராவிடம் தொடர்பான ஆளுநர் பேச்சு திட்டமிட்ட அப்பட்டமான வரலாற்றுத் திரிபு என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, "ஆரியம், திராவிடம் என்பது இனம் சார்ந்தது அல்ல. இடம் சார்ந்தது மட்டும் தான். அதுவும் ஆங்கிலேயர்கள் சூழ்ச்சியால் உருவாக்கப்பட்டது." என்று தெரிவித்திருந்தார். இதற்கு விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, 

"திராவிடம் என்பது மரபினம் அல்ல; நிலம் சார்ந்த ஒரு இனப்பிரிவு என்கிறார் ஆளுநர் ஆர்.என். ரவி அவர்கள். இதுதான் திட்டமிட்ட அப்பட்டமான வரலாற்றுத் திரிபு. திராவிடன் என்பது மொழிவழி தேசிய இனம் அல்ல. ஆனால் அது ஜீன் எனப்படும் குருதிவழி மரபினம் என்பது மானுடவியல் உண்மை.

திராவிடம் என்பது நிலம்வழி சார்ந்தது என்றால், ஆரியன் என்பதுவும் நிலவியல் சார்ந்த இனப்பிரிவு தானா? மரபினம் இல்லையா? ஆரியரான ஹிட்லரும் அதேபோல நிலம்சார்ந்த அடையாளத்தைக் கொண்டவர்தானா? ஆர்எஸ்எஸின் அக்மார்க் தயாரிப்பு தான் ஆர்.என்.ரவி என்பதைத் தொடர்ந்து உறுதிப்படுத்தி வருகிறார்."என்று அந்த டுவிட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thiruma say about dravidam issue


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->