'அமைச்​சர் எ.வ. வேலு சட்​டப்​பேர​வை​யில் கூறியது உண்​மைக்கு புறம்​பானது'; மாற்​றுத்​திற​னாளி​கள் சங்கத்தின் தலைவர் கண்டனம்..! - Seithipunal
Seithipunal


''மாற்​றுத்​திற​னாளி​கள் போராட்​டத்​தின்​போது நடை​பெற்ற தாக்​குதல் குறித்து அமைச்​சர் எ.வ. வேலு சட்​டப்​பேர​வை​யில் கூறியது உண்​மைக்கு புறம்​பானது. எங்களிடம் உரிய ஆதா​ரங்​கள் உள்​ளன.'' என தமிழக அனைத்து வகை மாற்​றுத்​திற​னாளி​கள் மற்​றும் பாது​காப்​போர் உரிமைகளுக்​கான சங்​கத் தலை​வர் தோ.​வில்​சன் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளி​யிட்ட அறிக்​கையில் குறிப்பிட்டுள்ளதாவது;

''பிப்ரவரி ​19 அன்று ​பேர​வை​யில் பேசிய மார்க்சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்சி சட்​டப்பேரவை உறுப்​பினர் எம்​.சின்​னதுரை,"மாத உதவித் தொகையை ரூ.1,500-ல் இருந்து ரூ.6,000 ஆக உயர்த்தக் கோரி போராடிய மாற்​றுத் திற​னாளி​களை காவல்​துறை நடத்​திய விதம் கண்​டிக்​கத்​தக்​கது. அமைப்​பின் பொதுச்​செய​லா​ளர் பா.ஜான்​சி​ராணியை காவல்​துறை நடத்​திய விதம் ஏற்​புடையதல்ல" என்​றார்.

இதற்கு பதிலளித்த அமைச்​சர் எ.வ.வேலு, ஜான்​சி​ராணியை காவல்​துறை​ தாக்​க​வில்லை என்​றும் அவர் தவறி விழுந்​ததாகவும் அவரை உடனே ஆம்​புலன்​ஸில் மருத்​து​வ​மனைக்கு போலீஸார்தான் அழைத்​துச் சென்​றதாகவும் தெரி​வித்​தார்.

அமைச்​சர் எ.வ.வேலு சட்​டப்​பேர​வை​யில் கூறியது உண்​மைக்கு புறம்​பானது. இதில் உள்​நோக்​கம் இல்​லை​யெனில், கண்​ணி​ய​மான காக்​கிச்​சட்​டை​யில் பெயர் பொறிக்​கப்​ப​டாத (பெயர்​களை கழற்றி வைத்​து​விட்​டு) உயர் அதி​காரி​கள் முதற் கொண்டு காவலர்​கள் வரை இந்த இழி​வான செயலில் ஈடு​பட்​டது எதற்​கு. மேலும், எங்களிடம் உரிய ஆதா​ரங்​கள் உள்​ளன. காவல் துறை​யினரின் இந்த காட்​டுமி​ராண்டி செயலை முறைப்​படி சந்​திப்போம்.'' என்று அறிக்கையில் தெரி​வித்​துள்​ளார்​.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The President of the Association of the Disabled People condemned what Minister EV Velu said in the Legislative Assembly as untrue


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..


செய்திகள்



Seithipunal
--> -->