மாநிலங்களின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் - மம்தா பானர்ஜி.!  - Seithipunal
Seithipunal


மத்திய அரசின் கொள்கைகளை மாநிலங்கள் மீது திணிக்கக்கூடாது என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவுறுத்தி உள்ளார்.

 நிதி ஆயோக்கின் நிர்வாக கவுன்சில் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று டெல்லியில் நடந்தது. இதில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் 15 நிமிடம் உரையாற்றிய மம்தா பானர்ஜி, மத்திய அரசு மாநிலங்களின் கோரிக்கைகளை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். 

இந்த கூட்டத்தில் பேசும்போது அவர் தெரிவித்ததாவது, மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையே மிகப்பெரிய ஒத்துழைப்பு இருக்க வேண்டும். மாநிலங்களின் கோரிக்கைகளை மத்திய அரசு இன்னும் தீவிரமாக எடுத்துக்கொண்டு நிறைவேற்ற வேண்டும். 

மத்திய அரசின் கொள்கைகளை மாநிலங்கள் மீது திணிக்கக்கூடாது. அந்த வகையில் புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடாது என மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

 மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த மறுத்து வரும் மம்தா பானர்ஜி, இந்த கொள்கையை ஆய்வு செய்யவும், மாநில அளவிலான கல்வி கொள்கை உருவாக்குவதற்கான தேவையை ஆராயவும் வல்லுனர் குழு ஒன்றை கடந்த ஏப்ரல் மாதம் அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The central government should fulfill the demands of the states - Mamata Banerjee


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->