தஞ்சை: கூட்டத்தை பாதியில் நிறுத்திய திமுக உறுப்பினர்கள்.! தள்ளுமுள்ளு, கைகலப்பு.!  - Seithipunal
Seithipunal


இன்று தஞ்சாவூரில் நடைபெற்ற நிக்கல்சன் கூட்டுறவு வங்கி சங்கப் பேரவைக் கூட்டத்தில், நிர்வாகிகள் இடையே தள்ளுமுள்ளு, கைகலப்பு ஆனது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சை வடக்கு வாசலில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில், இன்று நிக்கல்சன் கூட்டுறவு வங்கியின் 116 ஆவது ஆண்டு பேரவை கூட்டம் மற்றும் நிதிநிலை அறிக்கை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

கூட்டுறவு மேலாண்மை இயக்குனர் அன்புச்செல்வி நிதிநிலை அறிக்கை வாசித்துக் கொண்டிருக்கும்போதே, கூட்டத்திற்கு வந்த திமுக உறுப்பினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கடந்த ஆண்டு வெளியிடும்போது இந்த நிதிநிலை அறிக்கை தஞ்சை சட்டமன்ற உறுப்பினர், மாநிலங்களவை உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களின் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தது. தற்போது அறிக்கை புத்தகத்தில் முன்னாள் முதல்வர்கள் உடைய படங்கள் இடம் பெற்றுள்ளது. ஆனால் தற்போதுள்ள தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் புகைப்படமோ., சட்டமன்ற உறுப்பினர்கள் படமோ இடம்பெறவில்லை என்று கண்டனம் தெரிவித்து கோஷம் எழுப்பினர்.

மேலும் அங்கு போடப்பட்டிருந்த மேஜைகளை தள்ளிவிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து இது போன்ற தவறுகள் நடைபெறாமல் பார்த்துக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டது.

இருந்தபோதிலும் திமுக உறுப்பினர்கள் விடாமல் அங்கு கோஷம் எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் திமுக -அதிமுக உறுப்பினர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டவே இந்த கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thanjai some incident in dmk and admk party members


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->