ஓபிஎஸ் மகனுக்கு அடுத்த ஆப்பு ரெடி.. உச்ச நீதிமன்றத்தை நாடிய தங்க தமிழ்ச்செல்வன்.!! - Seithipunal
Seithipunal


சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் தரப்பினரை நோக்கி தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரன் அண்ணா தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் இந்த விவகாரம் குறித்து அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? என கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு பதில் அளித்த ஓபிஎஸ் அணியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் "சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளோம். ரவீந்திரநாத் சொத்து விவரங்களை மறைக்கும் நோக்கில் வேட்புமனு தாக்கல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதில் எந்தவித உண்மை தன்மையும் இல்லை" கூறி இருந்தார்.

இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு தேனி நாடாளுமன்ற தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்ட தங்க தமிழ்ச்செல்வன் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் "ஓ.பி.ரவீந்திரநாத் வழக்கில் தேனி தொகுதியின் வேட்பாளர் என்ற முறையில் ரவீந்திரநாத் வெற்றிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தனது தரப்பு வாதங்களை கேட்காமல் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க கூடாது" என மனு தாக்கல் செய்துள்ளார். இன்று காலை ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்ய உள்ளதாக அறிவித்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடராத தங்க தமிழ்ச்செல்வன் உச்ச நீதிமன்றத்தில் கே.வி.எட் மனு தாக்கல் செய்திருப்பது ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு புது நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thanga tamilselvan filed caveat petition in Supreme Court regarding OPR case


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->