Cauvery Issue || தமிழ்நாட்டின் உரிமைக்காக! திமுகவுடன் கை கோர்க்கும் அதிமுக! காங்கிரஸ் நிலைப்பாடு என்ன? - Seithipunal
Seithipunal


கர்நாடக அணையில் இருந்து தமிழகத்திற்கு திறக்க வேண்டிய காவிரி நதி நீர் பங்கை உரிய முறையில் திறக்காததால் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. ஏற்கனவே தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 5000 கன அடி நீர் வீதம் தண்ணீர் திறக்க வேண்டும் என காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

ஆனால் இனி தமிழகத்திற்கு காவிரி நதிநீர் திறந்து விட முடியாது என கர்நாடகாவை சேர்ந்த அனைத்து அரசியல் கட்சி கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்ததோடு அதனை கர்நாடக அரசும் உறுதிப்பட தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு அனைத்து கட்சிகள் எம்பிக்கள் குழு நாளை டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறது. 

காவிரி விவகாரம் தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் உடன் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான தமிழகத்தைச் சேர்ந்த எம்பிக்கள் குழு சந்தித்து கோரிக்கை மனு அளிப்பதோடு தமிழகத்திற்கான உரிமையை மீட்டு தர வேண்டும் என வலியுறுத்த உள்ளனர். 

தமிழ்நாடு எம்.பிக்கள் குழு நாளை மாலை மத்திய அமைச்சரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை காவிரி நீர் விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சரை சந்திக்கும் தமிழக அமைச்சர் துரைமுருகன் தலைமையில் மத்திய நீர்வளத் துறை அமைச்சரை சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.

அதற்கு அதிமுக முழு ஒத்துழைப்பு அளிக்கும். அந்த குழுவில் அதிமுக எம்பிக்களும் பங்கு பெறுவார்கள் என அதிமுக எம்பி தம்பிதுரை தெரிவித்துள்ளார். ஏற்கனவே கர்நாடக முதல்வர் சித்தராமையா காவிரி விவகாரம் குறித்து சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் குரல் எழுப்புவது குறித்து கர்நாடக மாநில நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடக மாநிலத்தில் கர்நாடகா ஆட்சியில் உள்ளதால் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் எம்பிக்களும் இதில் பங்கேற்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thambidurai said AIADMK participate in MPs group for Cauvery issue


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->