தமிழகத்தில் டாஸ்மாக் நேரம் மீண்டும் மாற்றம்.?! வெளியான பரபரப்பு தகவல்.! - Seithipunal
Seithipunal


கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் டாஸ்மாக் கடை விற்பனை நேரத்தை தமிழக அரசு ஏற்கனவே குறைத்துள்ளது.

இந்நிலையில், டாஸ்மாக் விற்பனை நேரத்தை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை மாற்றி அமைக்க வேண்டும் என்று, தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் பால் பாண்டியன், அவர்கள் தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு மின்னஞ்சல் மூலம் கோரிக்கை வைத்துள்ளார்.

அவரின் அந்த கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது,

"கொரோனா தீவிர பரவல் காரணமாக டாஸ்மாக் கடைகளில் பகல் 12 மணி முதல் இரவு 9 மணி வரை விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இரவு 9 மணிக்கு விற்பனை முடிந்தபின் கணக்குகளை முடிக்க 10 மணி ஆகிவிடுகிறது. டாஸ்மாக் பணியாளர்கள் வெகு தொலைவில் இருந்து பணிக்கு வருகின்றனர். 

இரவு நேர ஊரடங்கு காரணமாக இரவு 10 மணிக்கு மேல் போக்குவரத்து இல்லாததால் வீடுகளுக்குத் திரும்புவதில் சிரமம் ஏற்படுகிறது. மேலும், இரவு நேரங்களில் விற்பனை பணத்துடன் இருசக்கர வாகனங்களில் பணியாளர்கள் வீடு திரும்பும்போது வழிப்பறி செய்யப்படும் நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. 

இதன்காரணமாக, டாஸ்மாக் விற்பனை நேரத்தை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை என மாற்றியமைக்க வேண்டும்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tasmac time chenage request april


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->