தமிழகத்தில் தேர்தல் தள்ளிபோகிறதா?! வெளியான புதிய அறிவிப்பால் உண்டான சந்தேகம்!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலானது எப்பொழுது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. தேர்தல் ஆணையர்கள் தமிழகம் வந்து சூழ்நிலையை இங்கு அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து விட்டு சென்றுள்ள நிலையில், விரைவில் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது. 

தேர்தலும் பள்ளித் தேர்வுகளும் பெரும்பாலும் ஒரே நேரத்தில் கோடை விடுமுறையை ஒட்டி வரும் நிலையில், பெரும்பாலும் தேர்வுகள் முடிந்த பிறகு தேர்தல் நடத்தப்படும். இந்த நிலையில் இந்த வருடம் கொரோனா காரணமாக பள்ளிகள் தாமதமாக துவங்கியது. மார்ச் மாதத்தில் நடைபெற வேண்டிய தேர்வுகள் மே மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

இன்று பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் மே 3ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை பனிரெண்டாம் வகுப்பு தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் சட்டமன்ற பொதுத் தேர்தலானது ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும் அல்லது ஜூன் மாதம் வரை சட்டமன்ற பொதுத் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்ற ஒரு சூழல் நிலவுகிறது. ஏனெனில் மே 21ம் தேதி 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிந்தவுடன் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்க வாய்ப்பு இருப்பதால், சட்டமன்ற பொதுத் தேர்தலானது ஜூன் மாதம் செல்ல வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu election date may be postponed


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->