நரேந்திர மோடிக்கு எதிராக தமிழக காங்கிரஸ் முறையீடு.!! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் நடைபெற்று வரும் மக்களவைப் பொதுத் தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்துள்ள சூழலில் இன்னும் நான்கு கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற உள்ளன. 

தற்போது மத்தியில் ஆளும் பாஜக அரசு மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் தீவிர மத அரசியலை முன்னெடுத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. அதனை மெய்ப்பிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி தனது தேர்தல் பிரச்சார யுத்தியை மாற்றி அமைத்துள்ளார்.

குறிப்பாக மத்திய பிரதேச மாநிலத்தில் நேற்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி "காங்கிரஸ் கட்சியின் நோக்கம் எவ்வளவு ஆபத்தான என்பதை புரிந்து கொள்ள 20 முதல் 25 ஆண்டுகளாக கட்சியில் இருந்து வெளியேவர்களை கேட்டுப் பாருங்கள். 

மக்களின் நம்பிக்கை அல்லது தேச நலன் பற்றி காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு கவலை இல்லை. தேசவிரோத கருத்துகளை வெளியிடுவதில் அவர்களுக்குள் போட்டி உருவாகியுள்ளது. பாகிஸ்தான் மீது அன்பையும் நமது ராணுவத்தின் மீது வெறுப்பையும் காங்கிரஸ் கட்சி காட்டுகிறது. பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக ஜகாத் செய்யப் போவதாக மிரட்டுகின்றனர். மோடிக்கு எதிராக வாக்களிக்குமாறு காங்கிரஸ் கேட்கிறது.

ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்களிடம் மோடிக்கு எதிராக வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கின்றனர். காங்கிரஸ் எனக்கு எதிராக வாக்களிக்கும் ஜகாத்துக்கு அழைக்கிறது. இந்தியாவில் வாக்கு ஜகாத்தா அல்லது ராமராஜமா என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என பொதுமக்கள் மத்தியில் பேசியுள்ளார்.

இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் பரப்புரையில் விழிப்புணர்வை தூண்டும் வகையில் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை சேர்த்து இருப்பதால் அதனை விசாரணைக்காக பட்டியலிட மறுப்பதாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் நீதிபதியிடம் புகார் அளித்துள்ளார். அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் மனுவில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து மீண்டும் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TamilNadu Congress appeal petition in madrashc against Narendra Modi


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->