முதல்வர் பழனிசாமி மத்திய அரசுக்கு கடிதம்! பாஜக அரசுக்கு பேரதிர்ச்சி கொடுத்த இபிஎஸ்!  - Seithipunal
Seithipunal


காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட தமிழ்நாட்டின் ஒப்புதல் தேவையில்லை என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு கர்நாடக அரசு கடிதம் எழுதியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தமிழக முதலமைச்சர் பழனிசாமி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். 

காவிரி நடுவர் மன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றின் தீர்ப்புகளின்படி காவிரியில் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நீரை வழங்காமல் ஏமாற்றி வரும் கர்நாடக அரசு, அடுத்தக்கட்டமாக மேகதாது என்ற இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை ஒன்றை கட்ட முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

புதிய அணை கட்டுவதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு நடத்த அனுமதி கோரி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் கர்நாடக அரசு கடந்த ஜூன் மாதம் விண்ணப்பித்தது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இதுதொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். அதனடிப்படையில் கடந்த ஜூலை 19-ஆம் தேதி நடைபெற்ற சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் வல்லுனர் குழு கூட்டத்தில் கர்நாடக அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு விட்டது.

இத்தகைய சூழலில் தான் மேகதாது அணை கட்ட தமிழகத்தின் ஒப்புதல் தேவையில்லை என்றும், தமிழகத்தின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் புதிய அணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி மத்திய அரசுக்கு கர்நாடக அரசு கடிதம் எழுதியது. 

தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு புதிய அணைகளை கட்டக்கூடாது என்று உச்சநீதிமன்றம் பலமுறை ஆணையிட்டுள்ளது. இந்த நிலையில் மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவை அனுமதிக்கக்கூடாது என மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். 

மேலும் மேகதாது தொடர்பான தமிழக அரசின் வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது என முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார். காவேரியில் மேகதாது உள்ளிட்ட எந்த திட்டத்திற்கும் கர்நாடக அரசுக்கு அனுமதி அளிக்க கூடாது என முதல்வர் பழனிசாமி கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். கருநாடகத்தின் பாஜக அரசுக்கு இது பேரதிர்ச்சியாக தான் இருக்கும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu CM Palanisamy wrote letter to central govt


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->