உச்சநீதிமன்ற உத்தரவால் தப்பிக்க முடியாமல் தவிக்கும் ப.சிதம்பரம்.! - Seithipunal
Seithipunal


ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தின் அந்நிய நேரடி முதலீட்டை பெற்றதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி கைது செய்யப்பட்ட சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது, இதில் சி.பி.ஐ. தாக்கல் செய்த வழக்கில் ஜாமின் வழங்கப்பட்ட நிலையில், அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கிலும் ஜாமின் வழங்க கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவர் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை கடந்த 15 ஆம் தேதி விசாரணை செய்த நீதிமன்றம் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்திருந்தனர்.

இந்தநிலையில், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்க துறை உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது, இந்த மனு மீதான விசாரணையில் திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்த அனுமதி அளித்துள்ளது.

வரும் 22,23 ஆகிய தேதிகளில் சிதம்பரத்திடம், விசாரணை நடத்த வேண்டும் என அமலாக்கத்துறை கோரிக்கையை ஏற்று கொண்ட நீதிபதிகள் நவம்பர்  22,23 ஆகிய தேதிகளில் சிதம்பரத்திடம் விசாரணை நடந்த  உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

supreme court granted permission for investigate chithabaram


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->