முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நிரந்தர ஜாமீன்!! - Seithipunal
Seithipunal


கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் சுமார் 3 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனைகளுடன் இடைக்கால ஜாமின் வழங்கியது.

சென்னை உயர் நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உச்ச நீதிமன்றத்தை நாடினார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் வெளிமாநிலம் செல்ல சென்னை உயர்நீதிமன்ற அனுமதி பெற வேண்டும் என்ற நிபந்தனையும் தளர்த்தி உத்தரவிட்டுள்ளது. அதே போன்று இடைக்கால ஜாமீனில் இருந்த ராஜேந்திர பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் நிரந்தர ஜாமீன் வழங்கியது. மேலும் வெளிநாடு செல்வதென்றால் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடி அனுமதி பெற்று செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Supreme Court granted permanent bail to former minister Rajendra Balaji


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->