ஸ்டாலினின் முதல்வர் கனவை கலைத்த உச்சநீதிமன்றம்! திமுக தொடர்ந்த வழக்கில் அதிரடி உத்தரவு!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18-ம் தேதி மக்களவை மற்றும் 18 தொகுதிக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் இன்னும் நான்கு தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் அதில் அண்மையில் காலியானதாக  அறிவிக்கப்பட்ட சூலூரை தவிர்த்து ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி தொகுதியில் ஏப்ரல் 18 ஆம் தேதியே இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என  திராவிட முன்னேற்ற கழகம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

ஓட்டப்பிடாரம் தொகுதியில்  இருந்த வழக்கினை டாக்டர் கிருஷ்ணசாமி  திரும்பப் பெற்றுக்கொண்டார். அதேபோல திருப்பரங்குன்றம் தொகுதி தொடரப்பட்ட வழக்கில் அதிமுக எம்எல்ஏ போஸ் பெற்ற வெற்றி செல்லாது என்று அறிவித்தது.  இதனையடுத்து 3 தொகுதிகளுக்கும் 18ம் தேதி இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என திமுக வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கை விசாரித்த டெல்லி உச்சநீதிமன்றம் ஏப்ரல் 18ம் தேதி அன்று இந்த மூன்று தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த முடியாது. மூன்று தொகுதிகளிலும் தேர்தல் நடத்த கால அவகாசம் தேவை என தேர்தல் ஆணையம் தெரிவித்த நிலையில் தற்போது அந்த மூன்று தொகுதிகளுக்கும் தேர்தல் இல்லை என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனையடுத்து 21 தொகுதிகளை வென்று ஆட்சியைப் பிடிக்கும் திமுகவின் கனவு கலைந்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

supreme court dismiss dmk by election case


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->