குடியுரிமை திருத்த சட்டத்திற்கு தடை?! திமுக உள்ளிட்ட 144 மனுக்கள் குவிந்ததால் உச்சநீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!  - Seithipunal
Seithipunal


திமுக, காங்கிரஸ், மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை இன்று விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, திருத்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியா வந்துள்ள சிறுப்பான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, காங்கிரஸ், திமுக, மக்கள் நீதி மய்யம், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் சார்பில், உச்சநீதிமன்றத்தில் 144 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 18-ம் தேதி இந்த மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு, இதுகுறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இன்று இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், 144 மனுக்களில் 60 மனுக்கள் மட்டுமே அரசுக்கு கொடுக்கப்பட்டுள்ளன என  மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். 

இன்று இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், இவ்வளவு மனுக்கள் ஏன் என்ற காரணத்தை அறிய முடியவில்லை. மனுக்கள் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்தப்படும். அனைத்து மனுக்களையும் விசாரிக்காமல் ஒருதலைபட்சமான உத்தரவு பிறப்பிக்க போவதில்லை என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். 

இதனிடையே குடியுரிமை திருத்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் கோரிக்கை வைக்க அதற்கு உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

supreme court about oppose petitions of caa


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->