கேஸ் சிலிண்டர் விலை திடீர் உயர்வு..! மத்திய அரசை கண்டித்து சென்னையில் சி.பி.எம். போராட்டம்...! - Seithipunal
Seithipunal


மத்திய கிழக்கு நாடுகளைச் சுற்றியுள்ள போர் பதற்றம் அதிகரித்து, குறிப்பாக ஈரான் மேற்கொண்டு வரும் தாக்குதல்கள் உலகளாவிய எரிபொருள் சந்தையில் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகின்றன. இந்த சூழ்நிலையில் எரிவாயு உள்ளிட்ட எரிபொருட்களின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும் அபாயம் குறித்து பல்வேறு தரப்புகள் கவலை வெளியிட்டு வருகின்றன.

இந்த நிலையில், 14.2 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை மத்திய அரசு திடீரென ரூ.60 உயர்த்தியுள்ளது. இதன் விளைவாக சென்னையில் ஒரு 14.2 கிலோ எடை கொண்ட சமையல் கேஸ் சிலிண்டர் தற்போது ரூ.928.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த திடீர் விலை உயர்வு பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதுடன், எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.ஈரான் தொடர்பான போர் பதற்றம் இருந்தாலும், சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது என்று மத்திய அரசு முன்பு விளக்கம் அளித்திருந்தது.

ஆனால் அதனைத் தொடர்ந்து விலை உயர்த்தப்பட்டிருப்பது குறித்து அரசியல் வட்டாரங்களில் கேள்விகள் எழுந்துள்ளன.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சமையல் கேஸ் சிலிண்டர் விலையை உயர்த்திய முடிவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கோரி சென்னை குறளகம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் கட்சியினர் பலரும் கலந்து கொண்டு மத்திய அரசின் விலை உயர்வு முடிவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sudden increase gas cylinder prices CPM protests Chennai against central government


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!


செய்திகள்



Seithipunal
--> -->