திமுகவிற்கு வேலை கொடுத்த அமித் ஷா! ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு! வியப்பில் அரசியல் பார்வையாளர்கள்!  - Seithipunal
Seithipunal


"திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில், அமித்ஷா அவர்களின் கருத்துக்கான எதிர்வினை குறித்து முடிவெடுக்கப்படும்" என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார். 

இன்று (14-09-2019) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.  அப்போது அவரிடம்  இளைஞர் அணியில் 30 இலட்சம் இளைஞர்களை சேர்க்க வேண்டும் என்ற இலக்கை வைத்து உதயநிதி அவர்கள் செயல்பட்டுக் கொண்டிருப்பது பற்றி? கேட்ட போது, அது அவருடைய வேலை – கடமை. அந்த வேலையை அவர் செய்துக் கொண்டிருக்கிறார் என ஸ்டாலின் கூறினார். 

ரயில்வே தேர்வில் தமிழ் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. இன்றைக்கு, ஒரே நாட்டிற்கு ஒரே மொழி இந்தி தான் என்று அமித் ஷா அவர்கள் சொல்லியிருக்கிறார். பன்முகத்தன்மையை சிதைக்கும் வகையில் இதுபோன்று கருத்து கூறியிருப்பதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? என கேட்டபோது "பா.ஜ.க ஆட்சிப் பொறுப்பை ஏற்றதற்குப் பிறகு, இது போன்று 2வது முறையாக தொடர்ந்து தமிழ் மொழிக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய வகையில் ரயில்வேயில், தபால் அலுவலகங்களில்,அது தேர்வாக இருந்தாலும், வேலை வாய்ப்பாக இருந்தாலும், அறிக்கைகளாக இருந்தாலும் அவைகளில் எல்லாம் தமிழ் இடம்பெறக் கூடாத ஒரு நிலையை, முயற்சியில் ஈடுபட்டார்கள். 

அதனை, ‘முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்’ என்பதற்காக திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து பல போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி, அதற்குப் பிறகு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து வலியுறுத்தியதற்குப் பிறகு அவைகள் எல்லாம் திரும்பப் பெறப்பட்டிருக்கினறது. ஆனால், திடீரென்று இன்று அமித்ஷா அவர்கள் கூறியதாக வெளிவந்திருக்கும் செய்தி அதிர்ச்சியளிக்கத்தக்க வகையில் அமைந்திருக்கிறது. எனவே, இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இது நிச்சயம் அமையும். எனவே, அக்கருத்தை அவர் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நான் வலியுறுத்துவதாக ஸ்டாலின் கூறியுள்ளார். 

நாளைய தினம் திருவண்ணாமலை மாவட்டத்தில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முப்பெரும் விழா நிகழ்ச்சி முடிந்த மறுநாள், கழக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் நடைபெறவிருக்கிறது. அந்தக் கூட்டத்தில் இது குறித்து விவாதித்து இதனை எப்படி சந்திப்பது? எப்படி நம்முடைய எதிர்ப்புக் குரலை கொடுப்பது? என்பது பற்றி கலந்து பேசி முடிவெடுத்து அதற்குப் பிறகு அறிவிக்க இருக்கிறோம்" என ஸ்டாலின் தெரிவித்தார். 

நாட்டின் பொருளாதாரம், தமிழகத்தில் நிலவும் பிரச்சனைகள் இது குறித்தெல்லாம் கட்சியின் உயர்மட்டக்குழு பேசும் என எதிர்பார்த்தால், இன்று காலை உருவான அமித் ஷாவின் பேச்சு, உயர்மட்டக்குழு பேசும் பொருளாக இருக்க போகிறது என்பது அரசியல் பார்வையாளர்களுக்கு வியப்பளிக்கிறது. ஏனெனில் எது பரபரப்பாக இருக்கிறதோ, எளிதாக கிடைக்கும் விளம்பரத்திற்காக அதனை பற்றி பேசுவதில் தான் அரசியல் கட்சிகள் ஆர்வம் காட்டும். அதற்கு திமுகவும் விதிவிலக்கல்ல என்பதனை போலவே ஸ்டாலின் பதில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Stalin press meet about amit shah apeech


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->