புலன் விசாரணை விஜயகாந்த் போல ஸ்டாலின் வேஷம்.! அமைச்சரால் சிரித்த செய்தியாளர்கள்.!  - Seithipunal
Seithipunal


இன்று ஆத்தூரில் அதிமுக சேலம் புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளரும், தமிழ்நாடு தலைமை கூட்டுறவு வங்கி தலைவருமான ஆர்.இளங்கோவனின் இல்ல திருமண விழா நடைபெற்றது. இதில் முதல்வர் எடப்பாடி மற்றும் தமிழக அமைச்சர்கள் செல்லூர் ராஜ், எஸ்.பி.வேலுமணி, ராஜேந்திரபாலாஜி, காமராஜ், சேவூர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

திருமண நிகழ்ச்சி முடிந்த பின்னர் கிளம்பிய ராஜேந்திரபாலாஜி-இடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்பொழுது ஸ்டாலின் குறித்த விமர்சனத்தை அவர் பதிவு செய்தார். அதில். "மக்களின் மீது இருக்கும் அக்கறையால் முதல்வர் செம்பரம்பாக்கம் ஏரியை சென்று பார்வையிட்டார். 

அதனை பொறுத்துக்கொள்ள முடியாத ஸ்டாலின் புலன்விசாரணை விஜயகாந்த் மாதிரி கிளம்பிவிட்டார். திமுக ஜெயிக்கும் ஸ்டாலினின் கனவு நிச்சயம் பலிக்காது." என்று கூறியிருக்கிறார். 

நடிகர் விஜயகாந்த் நடித்த புலன் விசாரணை படத்தில் அவர் அணிந்திருக்கும் உடை போல ஸ்டாலின் போட்டுக்கொண்டு மழை சேதத்தை பார்வையிட்டதை தான் அவர் புலன் விசாரணை விஜயகாந்த் என்று விமர்சனம் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

stalin get up like pulan visaranai vijayakanth


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->