கார்த்திக் சிதம்பரத்திற்கு ஆப்பு..? ஓங்கி ஒலித்த எதிர்ப்பு குரல்.. திமுக கூட்டத்தில் சலசலப்பு.!! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற தேர்தலுக்காக தொகுதி வாரியாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வரும் திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு இன்று சிவகங்கை, விருதுநகர் தொகுதிக்கான திமுக நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்தியது.

இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என் நேரு, தங்கம் தென்னரசு , உதயநிதி ஸ்டாலின், ஏ.வ வேலு மற்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி ஆகியோர் பங்கேற்றனர். 

இன்று காலை நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பொறுப்பு அமைச்சர், மேயர், துணைமேயர் நகர மன்ற தலைவர்கள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை, விருதுநகர் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது திமுக வேட்பாளர் போட்டியிட வேண்டும் என திமுக நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சி உடனான தொகுதி பங்கிட்டு பேச்சு வார்த்தையில் விருதுநகர் மற்றும் சிவகங்கை தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க திமுக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியான நிலையில் இன்று நடைபெற்ற திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் சிவகங்கை மற்றும் விருதுநகர் தொகுதிகள் திமுக போட்டியிட வேண்டும் என கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.

சிவகங்கை, விருதுநகர் தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டால் திமுக நிர்வாகிகள் களத்தில் தேர்தல் பணியாற்றுவார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் சிவகங்கையில் மீண்டும் களமிறங்க காத்திருக்கும் கார்த்திக் சிதம்பரத்தின் வெற்றி வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sivagangai DMK raised voice against Congress


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->