காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் போலீசில் சரண்.! ஒரு வருடம் கடுங்காவல் தணடனை.! - Seithipunal
Seithipunal


சாலை தகராறில் வழங்கப்பட்ட ஓர் ஆண்டு சிறை தண்டனையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் நவ்ரோஜ் சித்து சரணடைந்துள்ளார். 

கடந்த 1988ஆம் ஆண்டு பாட்டியாலா சாலை தகராறில், சித்து ஒருவரை வாகனத்தில் இருந்து வெளியே இழுத்து கையால் குத்தியதில் அவர் உயிரிழந்தார்.

நேற்று இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் சீராய்வு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சிந்துவுக்கு ஓராண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்தது.

இந்த நிலையில், இன்று மருத்துவ காரணங்களால் நீதிமன்றத்தில் சரண் அடைவதற்கு கூடுதல் காலக்கெடு கோரி சித்து சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை ஏற்க மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், சித்து சரணடைய வேண்டும் என்று தெரிவித்தனர். இதனை தொடர்ந்து நவ்ரோஜ் சித்து தற்போது சரணடைந்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sidhu surrender


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->