பதவியை ராஜினாமா செய்த மத்திய அமைச்சர்? அதிர்ந்த பாஜக.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்ட்ராவில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், பாஜா - சிவசேனா கூட்டணி அமைத்து போட்டியிட்டன, இந்த கூட்டணி மொத்தமாக 161 தொகுதிகளில் வெற்றிபெற்றது, அதில் பாஜக 105 தொகுதிகளிலும் ,சிவசேனா 56 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இதில் ஏழு சுயேட்சை எம்.எல்.ஏக்கள் சிவசேனாவுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர். சரத் பவார் தலைமைலான தேசியவாத காங்கிரஸ் கட்சி 54 தொகுதிகளில் வெற்றி பெற்றதுள்ளது.

50-50 பார்முலாப்படி முதலமைச்சர் பதவியை இரண்டரை ஆண்டுகளுக்குப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற சிவசேனாவின் திட்டத்தால் மகாராஷ்ட்ராவில் பாஜக ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.

இதையடுத்து, 50-50 பார்முலாப்படி முதலமைச்சர் பதவியை இரண்டரை ஆண்டுகளுக்குப் பகிர்ந்து கொள்ள பாஜக மறுப்பு தெரிவித்துவிட்டதால், சரத் பவார் தலைமைலான தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க முடிவெடுத்த சிவசேனா சரத்பவாரிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையின் போது மத்தியில் பாஜக உடனான கூட்டணியை முறித்துக்கொண்டால், ஆதரவளிப்பதாக சரத் பவார் திட்டவட்டமாக கூறிவிட்டார். 

இந்நிலையில், கனரகத் தொழில் மற்றும் பொதுநிறுவனங்கள் துறை அமைச்சராக பதவி வகித்து வந்த அரவிந்த் சாவந்த் மத்திய அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகினால்தான் கூட்டணி என சரத்பவார் கட்சி நிபந்தனை விதித்தால் தமது பதவியை அரவிந்த் சாவந்த் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

shiv sena mp resign his miniter post


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->