செந்தில் பாலாஜி மீதான வழக்கு ரத்தாகுமா? மார்ச் 6ல் க்ளைமேக்ஸ்.!! - Seithipunal
Seithipunal


முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தன் மீது அமலாக்கத்துறை பொய்யான வழக்கு தொடர்ந்து உள்ளதாக கூறி அதனை ரத்து செய்ய வேண்டும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். 

இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில் அமலாக்குத்துரை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. 

நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் இன்று அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்தது. அந்த பதில் மனுவில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை பணம் வாங்கும் நோக்கில் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்யவில்லை.

வழக்கின் விசாரணையை துவங்க தயாராக உள்ளபோது செந்தில் பாலாஜி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனதை இரண்டு முறை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பில் மூன்று மாதத்திற்குள் வழக்கின் விசாரணை நடத்தி முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என அமலாக்கத்துறை இயக்குனர் கார்த்திக் தாசரி பதில் மனு தாக்கல் செய்தார்.

அப்போது இந்த வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைக்க வேண்டும் என செந்தில் பாலாஜியின் தரப்பு கோரிக்கை வைத்தது. அதனை ஏற்க மறுத்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அல்லி வழக்கின் விசாரணையை நாளை மறுநாளுக்கு ஒத்திவைத்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Senthilbalaji appeal petition case Postponed March6


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->