மகாத்மா காந்தி பெயரை நீக்கியதற்கு எதிர்ப்பு; 10 ஆயிரம் பேரை திரட்டி பிரதமர் மோடி வீடு முற்றுகையிடுவோம்: செல்வப்பெருந்தகை சூளுரை..!
Selva Perunthagai announced that they will besiege Prime Minister Modis residence with 10000 people
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு (100 நாள் வேலைத் திட்டம்) உத்தரவாதத் திட்டத்தின் பெயரை 'விபி-ஜி ராம் ஜி'என மத்திய அரசு மாற்றியமைத்துள்ளது. இதனை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் இன்று நடைபெற்றது. இதன் போது செல்வப்பெருந்தகை பேசுகையில் கூறியுள்ளதாவது:
பிரதமர் மோடிக்கு, மகாத்மா காந்தி பெயரை இந்திய தேசத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்பதுதான் நோக்கம். ஒரு மோடி அல்ல, ஆயிரம் மோடி வந்தாலும் காந்தி பெயரை நீக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். அத்துடன், காந்தியின் புகழை அழிக்க வேண்டும் என்பதே ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் நோக்கம் என்றும், காங்கிரஸ் கட்சியின் நோக்கம் எல்லோரையும் நேசிக்க வேண்டும், பாதுகாக்க வேண்டும் என்பதுதான். ஆனால், பாஜகவின் கொள்கை என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன், இந்த நாட்டை ஒரு தரப்பினர் தான் ஆள வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்றும், மகாத்மா காந்தி பெயரைத் தாங்கி நிற்கும் 100 நாள் வேலைத்திட்டத்தைச் சீரழிக்க வேண்டும் என்று பா.ஜ.க., மோடி அரசு நினைக்கிறது என்று விமர்சித்துள்ளார். இதனால், அதனைக் கண்டித்து தேசம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறதாகவும், தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல இருக்கிறோம். தமிழகத்தில் இருந்து 10 ஆயிரம் பேரைத் திரட்டி டெல்லியில் உள்ள பிரதமர் மோடி வீட்டை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இன்று நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சூரஜ் ஹெக்டே, முன்னாள் எம்.பி. செல்லக்குமார், ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ., சசிகாந்த் செந்தில் எம்.பி., துணைத் தலைவர்கள் கோபண்ணா, சொர்ணா சேதுராமன், இமயா கக்கன், பொருளாளர் ரூபி மனோகரன், பொதுச்செயலாளர்கள் எஸ்.ஏ.வாசு, காண்டீபன், பி.வி.தமிழ்செல்வன், அமைப்புச் செயலாளர் ராம் மோகன், மகிளா காங்கிரஸ் தலைவர் ஹசினா சையத், எஸ்.சி.துறை தலைவர் ரஞ்சன் குமார், இலக்கிய அணி தலைவர் பி.எஸ்.புத்தன், மாவட்ட தலைவர்கள் எம்.ஏ.முத்தழகன், எம்.எஸ்.திரவியம், அடையாறு டி.துரை,எஸ்சி துறை பொதுச்செயலாளர் மா.வே.மலையராஜா, துணை தலைவர் ஜி.முருகன், நிலவன், கிஷோர்குமார், அகரம் கோபி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
English Summary
Selva Perunthagai announced that they will besiege Prime Minister Modis residence with 10000 people