எண்ணற்ற பேராபத்துகள்., மத்திய அரசு இதனை திரும்பபெற வேண்டும்.! சீமான் கோரிக்கை.! - Seithipunal
Seithipunal


எண்ணற்ற பேராபத்துகள் இருப்பதால் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்திக்கிறோம் என்று, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

வேளாண் சட்டம் அமல்படுத்தப்பட்ட நாளில் இருந்து விவசாயிகளின் போராட்டம் அந்தந்த மாநிலங்களில் துவங்கி, இந்திய தலைநகரம் வரை பரவியுள்ளது. மேலும், எத்தனை வருடங்கள் ஆனாலும் வேளாண் சட்டத்தை திரும்ப பெரும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். 

டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் பொருட்டும், மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் பொருட்டும் எதிர்க்கட்சிகள் தங்களின் குரல்களை பதிவு செய்து வருகின்றனர். விவசாயிகளின் போராட்டதை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை செய்துவருகிறது.

இந்நிலையில்,  ஒரே கல்வி கொள்கை, ஒரே தேர்தல் போன்று ஒரே வேளாண் சந்தையை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து சீமான் தெரிவித்ததாவது, "எண்ணற்ற பேராபத்துகள் இருப்பதால் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்திக்கிறோம். ஒரே நாடு, ஒரே கல்வி கொள்கை, ஒரே தேர்தல் போன்று ஒரே வேளாண் சந்தையை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது" என்று சீமான் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

seeman press meet dec 19


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->