பலியான பிஞ்சு: பேரதிர்ச்சியில் சீமான்., வேதனையில் கமல்ஹாசன்.!  - Seithipunal
Seithipunal


துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்திலிருந்து வெளியேறிய தோட்டா பாய்ந்து உயிரிழந்த சிறுவன் புகழேந்தியின் பெற்றோருக்கு, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்தியில், "பசுமலைப்பட்டி துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்திலிருந்து வெளியேறிய தோட்டா சிறுவன் புகழேந்தியின் இன்னுயிரைப் பறித்துவிட்டது.பிள்ளையை துள்ளத்துடிக்க பறிகொடுத்த பெற்றோரின் இழப்பு அளவீடற்றது. அவர்களுக்கு என் ஆறுதல்கள்.புகழேந்தியை இழந்து தவிக்கும் குடும்பத்திற்கு நீதி கிடைக்கவேண்டும்" என்று கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

இதேபோல், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில், "புதுக்கோட்டை மாவட்டம், பசுமலைப்பட்டியிலுள்ள காவலர் பயிற்சி மையத்தில், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டபோது கவனக்குறைவால் அருகில் இருந்த குடியிருப்பில் இருந்த சிறுவன் புகழேந்தி தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அச்சிறுவன் உயிரிழந்த செய்தியறிந்து பேரதிர்ச்சியும் பெருந்துயரமும் அடைந்தேன். 

சிறு வயது பிள்ளையைப் பறிகொடுத்து பரிதவிக்கும் பெற்றோருக்கு எனது ஆறுதலை தெரிவித்து அவர்களது ஆற்ற முடியா துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

கிராம மக்கள் வாழும் குடியிருப்புகளுக்கு அருகில் மிகவும் பாதுகாப்பில்லாத வகையில் அமைந்துள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை நிரந்தரமாக மூடவேண்டுமென்றும், இனி இதுபோன்ற துயரநிகழ்வுகள் வேறெங்கும் நிகழா வண்ணம் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென்றும், உயிரிழந்த அப்பாவிச் சிறுவன் புகழேந்தியின் குடும்பத்திற்குத் துயர்துடைப்பு நிதியாக ஒன்றிய அரசும் தமிழ்நாடு அரசும் தலா 50 இலட்சம் ரூபாய் வழங்க வேண்டுமென்றும், அக்குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்கி துயர் போக்கவேண்டுமென்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் சீமான் தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

seeman and kamalhaasan mourning to pugazhenthi dead


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->