தயாரான சசிகலா.. நடக்கப்போகும் மாற்றம்.? பீதியில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்.!! - Seithipunal
Seithipunal


சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.தற்போது சிறையில் உள்ள சசிகலாவை டிடிவி தினகரன் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் சிறைக்குச் சென்று சந்தித்து வருகின்றனர்.

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலா 2021 ஜனவரி 27-ஆம் தேதி விடுதலையாகிறார். சசிகலா செலுத்த வேண்டிய 10 கோடி அபராதம் செலுத்த தவறினால், கூடுதலாக ஒரு ஆண்டு சிறை தண்டனை பெற்று 2022 ஆம் ஆண்டு ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை செய்யப்படுவார் என சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. பெங்களூருவை சேர்ந்த நரசிம்ம மூர்த்தி ஆர்டிஐ இன் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு சிறைத்துறை நிர்வாகம் இவ்வாறு விளக்கம் அளித்துள்ளது. 

சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆவதற்கு வாய்ப்பு இருப்பதாக வழக்கறிஞர் ராஜா செந்தூரப் பாண்டியன் தெரிவித்துள்ளார்.மேலும், நன்னடத்தை விதிகளின் அடிப்படையில் சசிகலா இம்மாதம் இறுதியில் வெளியே வருவார் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சசிகலா தரப்பில் 10 கோடி அபராத தொகையை கட்ட புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் தங்கள் அபராத தொகையை காட்ட தயாராக இருப்பதாகவும், அதற்கு அனுமதி அளிக்க வேண்டும் எனவும் சசிகலா தரப்பு வழக்கறிஞர் பெங்களூர் நகர சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 

இந்த அபராத தொகையை கட்டவேண்டும் என்றால், கட்டாயம் நீதிமன்றம் அனுமதி பெற வேண்டும். இந்த வழக்கில் தீர்ப்பளித்த பெங்களூரு நகர சிவில் நீதிமன்றத்தில் அபராதத் தொகையை கட்ட தயாராக இருக்கிறோம். எங்களிடம் போதிய பணம் உள்ளது என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அந்த மனுவில் தெரிவித்துள்ளனர். சசிகலாவின் விடுதலையில் அதிமுகவில் மாற்றங்கள் ஏற்படுமோ என்ற பீதியில் அதிமுகவினர் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sasikala ready to pay for fine amount


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->