அதிமுகவின் நீடிக்கும் பரபரப்பு.. கலக்கத்தில் அதிமுக தலைமை.!! - Seithipunal
Seithipunal


சசிகலா தொடர்ந்து தொண்டர்களுடன் பேசி வரும் நிலையில், நேற்று அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சசிகலாவிடம் போனில் யாரும் பேசினால் இனி கட்சியில் இருந்து நீக்கப்படுவீர்கள். ஏற்கனவே பேசியுள்ள பலரின் ஆடியோவும் உறுதி செய்யப்படும் பட்சத்தில், அவர்களும் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்படுவார்கள். அதிமுகவிற்கு மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கை அழிக்க  சசிகலா முயற்சி செய்கிறார் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மதுரையை சேர்ந்த குபேந்திரன் என்ற ஆதரவாளரிடம் சசிகலா நேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது, கட்சிக்காரர்கள் எல்லாம் மிகவும் வருத்தப் படுகிறீர்கள். தொண்டர்கள் எல்லாரும் என்னுடன் இருக்கும் போது கட்சியை அழிய விடமாட்டேன். விரைவில் தொண்டர்களை சந்திக்க வருகிறேன். 

1987 எம்ஜிஆர் இறந்தபோது ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட பிரச்சினையை உடனிருந்து எதிர்கொண்டுள்ளேன். அதிலிருந்து மீண்டு வந்து தான் ஆட்சியை அமைத்தோம். எனவே இவர்கள் செய்வது எல்லாம் எனக்கு புதிது அல்ல. ஜெயலலிதா போல் நாமும் தொண்டர்களுடன் வந்து காட்டி, ஆட்சியையும் அமைப்போம். நான் கட்சி பணி செய்வதை யாராலும் தடுக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நெல்லையைச் சேர்ந்த பாரதி என்பவருடன் சசிகலா தொலைபேசியில் பேசிய ஆடியோ வெளியாகி உள்ளது. அந்த ஆடியோவில் கட்சிக்காக குரல் கொடுத்த புகழேந்தி  அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது ஆச்சரியம் அளிக்கிறது என சசிகலா தெரிவித்துள்ளார். சசிகலா பேசும் ஆடியோக்கள் தொடர்ந்து வெளியாகும் நிலையில், அதிமுகவில் பரபரப்பு நீடித்து வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sasikala new audio june 15


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->