செய்தியறிந்து வேதனையில் மூழ்கிய சசிகலா.!  - Seithipunal
Seithipunal


சென்னை உள்ள மருத்துவமனையில் சிகிச்சைபலனின்றி புலவர் புலமைப்பித்தன் காலமானார். அவரின் மறைவுக்கு சசிகலா இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், 

"பெரியவர் புலவர் புலமை பித்தன் மறைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். புலவர் புலமை பித்தன், எம்.ஜி.ஆர் மீதும் ஜெயலலிதா மீதும் மிகுந்த பாசம் கொண்டவர். எம்.ஜி.ஆர் காலத்தில் சட்டமன்ற மேலவை துணைத் தலைவராகவும், அரசவை கவிஞராகவும் பதவி வகித்தார்.

ஜெயலலிதா காலத்தில் சுற்றுலா வளர்ச்சி கழகத் தலைவராகவும், அ.இ.அ.தி.மு.கவின் அவைத் தலைவராகவும் செயலாற்றியவர். திரைப்படங்களில் தன் பாடல்கள் மூலம் திராவிட சிந்தனையும் தமிழர்களின் வளர்ச்சி சார்ந்த கருத்துகளையும், பாமரர்களும் புரிந்து கொள்ளும் வகையில் மிகவும் எளிய முறையில் வெளிப்படுத்தியவர்.

மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோருக்கு அவர் எழுதிய பாடல்கள் எல்லோராலும் ஈர்க்கப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக அ.இ.அ.தி.மு.க தொண்டர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்தது. புலவர் புலமை பித்தனின் மறைவு யாராலும் ஈடு செய்ய முடியாது. 

அன்னாரை இழந்து வாடும் அவரது குடுமபத்தினற்கும், அவரது துணைவியாருக்கும் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன். புலவர் புலமை பித்தனின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்" என்று சசிகலா தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sasikala mourning to pulamaipthan


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->