#BREAKING : உத்தரப்பிரதேச தேர்தல்  சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வெற்றி.! - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது.

இதில், 4 மாநிலங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட அனைத்து மாநிலங்களிலும் பின்னடைவை சந்தித்து வருகிறது.

இந்த நிலையில் தற்போதைய நிலவரப்படி, 403 தொகுதிகளை கொண்ட உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக 262 தொகுதிகளிலும், சமாஜ்வாதி 135 தொகுதியிலும், காங்கிரஸ் 2 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ்வாதி 2 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றனர்.

இந்நிலையில் உத்திர பிரதேச மாநிலத்தில் கர்ஹால் தொகுதியில் போட்டியிட்ட சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் வெற்றி பெற்றுள்ளார். அதில், அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளரை விட 95 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Samajwadi party Akhilesh Yadav victory


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->