ராஜினாமா செய்யுங்கள் ஸ்டாலின்! இந்திய அளவில் ட்ரண்ட் ஆகிய ஹேஷ்டேக்!   - Seithipunal
Seithipunal


கடந்த 14ஆம் தேதி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்டு இருந்தார்.

திமுக அமைச்சர்கள் உதயநிதி, அன்பில் மகேஷ், கே என் நேரு, துரைமுருகன், வேலு மற்றும் கனிமொழி, டி ஆர் பாலு, ஜெகத் ரட்சகன் உள்ளிட்ட பலரின் சொத்து பட்டியலை வெளியிட்டு இருந்தார். 

மொத்தமாக ஒரு லட்சத்து 34,000 கோடி அளவுக்கு திமுக மற்றும் திமுகவினர் சொத்து வைத்திருப்பதாக அண்ணாமலை அதில் தெரிவித்து இருந்தார்.

இதற்கிடையே, நேற்று திமுக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஊடகவியலாளர் ஒருவரிடம் ஆங்கிலத்தில் உரையாடும் ஆடியோவை அண்ணாமலை வெளியிட்டு இருந்தார்.

 

அதில், தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மகனும் அமைச்சருமான  உதயநிதி, ஸ்டாலினின் மருமகன் சபரீசன் ஆகியோர் ஒரே வருடத்தில் 30,000 கோடி பணம் குவித்து வைத்திருப்பதாக பழனிவேல் தியாகராஜன் பேசி இருந்தார்.

இந்த ஆடியோ விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதற்க்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தரப்பிலோ, திமுக தரப்பிலிருந்தோ எந்த எதிர்ப்பும், மறுப்பும் தெரிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில், பாஜகவினர் மற்றும் சிலர் டிவிட்டர் பக்கத்தில் Resign Stalin (ராஜினாமா செய்யுங்கள் ஸ்டாலின்) என்ற ஹேஷ் டேக்கை ட்ரண்ட் செய்து வருகின்றனர்.

இது இந்திய அளவிலும் ட்ரண்ட் ஆகியது. சுமார் 36 ஆயிரம் டிவிட்டுகள் இந்த ஹேஷ் டேக்கை பயன்படுத்தி கருது தெரிவித்துள்ளனர்.

அதில் சில பதிவுகள் : 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Resign Stalin trend in twitter


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->