வெற்றிபெற்ற ஒரே நாளில் தனது பதவியை ராஜினாமா செய்யப்போகும் MP?! - Seithipunal
Seithipunal


நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் கர்நாடகத்தில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் பாஜக 25 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி ஒரு தொகுதியிலும், அதன் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் ஒரு தொகுதியிலும், சுயேட்சை வேட்பாளர் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றனர்

குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 8 மக்களவை தொகுதியில் போட்டியிட்டது, அக்கட்சியின் தேசிய தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவகவுடா தும்கூரு தொகுதியிலும், அவரின் பேரனான பிரஜ்வால் ரேவன்னா ஹசன் தொகுதியிலும், மற்றொரு பேரனும், முதல்வர் குமாரசாமியின் மகனுமான நிகில் குமாரசாமி மாண்டியா தொகுதியிலும் போட்டியிட்டனர்.

இதில் தும்கூரு தொகுதியில் போட்டியிட்ட தேவகவுடா பாஜக வேட்பாளரிடம்  அதிர்ச்சி தோல்வியடைந்தார், அதே போல நிகில் குமாரசாமியும் தோல்வியை தழுவினார். பிரஜ்வால் ரேவன்னா மட்டுமே வெற்றி பெற்று அக்கட்சியின் ஒரே எம்பி ஆகியுள்ளார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ரேவன்னா, எனது தாத்தாவும் தேசிய தலைவருமான தேவகவுடாவிற்கு வழிவிடும் வகையில் எனது எம்.பி பதவியை ராஜினாமா செய்ய உள்ளேன் என அறிவித்தார். 

இது என்னுடைய தனிப்பட்ட முடிவு, கட்சியோ, தேவகவுடாவோ இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்றாலும் நன் எனது பதவியை ராஜினாமா செய்வதில் உறுதியாக உள்ளேன். இதை நான் உணர்ச்சி வசத்தால் எடுக்கப்பட்ட முடிவு அல்ல, ஆழ்ந்த சிந்தனைக்கு பின்னர் எடுக்கப்பட்ட முடிவு. மிக நெடிய அரசியல் அனுபவம் கொண்ட தேவகவுடாவின் இருப்பு பாராளுமன்றத்திற்கு தேவை என குறிப்பிட்ட ரேவன்னா. தேவகவுடா மீண்டும் ஹசன் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி ஆக வேண்டும் என தான் விரும்புவதாக தெரிவித்தார்.

தான் தொடர்ச்சியாக வெற்றி வந்த ஹசன் தொகுதியியை விட்டு தனது பேரன் ஹெச்.டி.ரேவன்னாவின் அரசியல் நுழைவுக்காக தனது தொகுதியை விட்டுக்கொடுத்துவிட்டு தும்கூர் தொகுதியில் தேவகவுடா போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ravenna sacrifice his post


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->