#BigBreaking || முதல்வர் வேட்பாளராக நடிகர் ரஜினிகாந்த்.! சற்றுமுன் வெளியான பரபரப்பு தகவல்.!! 
                                    
                                    
                                   rajini political entry nov 30
 
                                 
                               
                                
                                      
                                            இன்று காலை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்தார். தற்போது ரஜினி தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
இன்னும் சிறிது நேரத்தில் ஆலோசனைக் கூட்டம் முடிந்த பின் ரஜினி சார்பில் அறிக்கை வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அந்த அறிக்கையில் ரஜினியின் அரசியல் நிலைப்பாடு குறித்து முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், மக்கள் மன்றத்தின் ஒரு சில மாவட்ட நிர்வாகிகளின் செயல்பாடுகள் தனக்கு திருப்திகரமாக இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் பெயர்களை குறிப்பிட்டு தெரிவித்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகிஉள்ளது.
அதேபோல் மாவட்ட நிர்வாகிகள் பலரும் நடிகர் ரஜினிகாந்த் முதலமைச்சர் வேட்பாளராக வர வேண்டும். அப்போதுதான் மக்களிடம் ஆதரவு கிடைக்கும் என்றும் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தக் கருத்துக்களையெல்லாம் கேட்ட பின்பு நடிகர் ரஜினிகாந்த் மாவட்ட நிர்வாகிகள் இடையே சில கருத்துக்களை தெரிவித்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இருந்தபோதிலும் இந்த ஆலோசனைக் கூட்டம் முடிய இன்னும் ஒரு மணி நேரம் கூட ஆகலாம் என்றும், அதன் பின்பு நடிகர் ரஜினி தரப்பிலிருந்து ஒரு அறிக்கை வெளியாகும் என்றும், அந்த அறிக்கையில் நடிகர் ரஜினியின் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
                                     
                                 
                   
                       English Summary
                       rajini political entry nov 30