ராகுல் காந்தி பெண்களுக்கு எதிரானவரல்ல! பிரபல தமிழ் நடிகர் கருத்து! - Seithipunal
Seithipunal


பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக தொடர்ந்து கருத்துகளை கூறிவந்த  நடிகர் பிரகாஷ்ராஜ் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பெங்களூர் மத்திய தொகுதியில் போட்டியிடப் போவதாக சமீபத்தில் அறிவித்தார்.

இந்நிலையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை இன்று சந்தித்த பிரகாஷ்ராஜ் அவருடன் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். 

தனது அரசியல் பயணத்துக்கு கெஜ்ரிவால் அளித்துவரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு தொடர்பான தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் பிரகாஷ்ராஜ் பதிவு செய்துள்ளார்.

இந்த சந்திப்புக்கு பின்னர் பிரகாஷ்ராஜியிடம் செய்தியாளர்கள், நிர்மலா சீதாராமன் தொடர்பாக ராகுல் காந்தி தெரிவித்த கருத்து தொடர்பாக கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த பிரகாஷ்ராஜ், ராகுல் காந்தி பெண்களுக்கு எதிரானவரல்ல என்று கூறினார்.

ராகுல் கூறிய கருத்தை பெண்களுக்கு எதிரானது என்ற கண்ணோட்டத்தில் மட்டும் நீங்கள் ஏன் பார்க்க வேண்டும்?. பிரதமர் பாராளுமன்றத்துக்கு வரவில்லை, பதிலளிக்கவில்லை என்பது உண்மைதானே. அவர் கூறியதில் நாம் இதையும் இணைத்துப் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rahul Gandhi is not against women


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->