ராகுல் காந்தியின் 'ஒற்றுமை நடைப்பயணம்' திடீர் ஒத்திவைப்பு.. காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நடை பயணம் மேற்கொண்டு உள்ளார்.

அவருடைய இந்த நடை பயணம் தற்பொழுது பஞ்சாப் மாநிலம் லூதியானாவை அடைந்துள்ளது. இந்த நிலையில் இன்று காலை லூதியானாவில் நடைபெற்ற ராகுல் காந்தியின் நடைபயணத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சந்தோக்சிங் சவுத்ரி கலந்து கொண்டார்.

அப்பொழுது அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு திடீரென மயங்கி கீழே விழுந்தார். பிறகு அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சந்தோக்சிங் சவுத்ரி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தோக்சிங் சவுத்ரியின் மறைவுக்கு அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இரங்கல் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்பி சந்தோக்சிங் சவுத்ரியின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அவரது மறைவை அடுத்து ராகுல் காந்தியின் பாதயாத்திரை அடுத்த 24 மணி நேரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. மேலும், நாளை பிற்பகல் ஜலந்தர் அருகில் இருந்து நடைபயணம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rahul Gandhi Bharat jodo yatra postponed due to MP passed away


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->