குடியரசு தலைவர் தேர்தல் : திரௌபதி முர்மு வெற்றிபெற பிரகாசமான வாய்ப்பு - மம்தா பானர்ஜி.! - Seithipunal
Seithipunal


மஹாராஷ்டிராவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் திரவுபதி முர்மு வெற்றிபெற பிரகாசமான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 

மேற்கு வங்காள மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேற்று கொல்கத்தாவில் ஒரு ரதயாத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அங்கு அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர் கூறியதாவது:- "மஹாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு பா.ஜனதா கூட்டணியின் ஓட்டு பலம் அதிகரித்துள்ளது. அதனால், ஜனாதிபதி தேர்தலில் அக்கூட்டணியின் வேட்பாளர் திரவுபதி முர்மு வெற்றிபெற பிரகாசமான வாய்ப்பு உள்ளது. 

மேலும், அவரது பெயரை அறிவிப்பதற்கு முன்பு, எதிர்க்கட்சிகளுடன் பா.ஜனதா ஆலோசனை நடத்தி இருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால், பொதுநலனை கருதி, அவரை ஆதரிப்பது பற்றி பரிசீலித்து இருப்போம். எப்போதுமே கருத்தொற்றுமையுடன் வேட்பாளரை நிறுத்துவது நல்லது. குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் எடுக்கும் முடிவை நான் பின்பற்றுவேன்" என அவர் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Presidential election Draupadi Murmu has a bright chance to win Mamata Banerjee


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->