குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு - புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி சந்திப்பு.! - Seithipunal
Seithipunal


தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு தலைவர் வேட்பாளர் திரவுபதி முர்மு இன்று புதுச்சேரி வந்து ஆதரவு திரட்டினார்.

தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், புதிய குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் ஜூலை 18-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 21-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. 

இந்த தேர்தலில் பாஜக சார்பில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் திரவுபதி முர்மு குடியரசு தலைவர் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் சார்பில் பொதுவேட்பாளராக யஷ்வந்த் சின்கா போட்டியிடுகிறார்.

புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் பா.ஜ.க.- என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்தநிலையில் கூட்டணி கட்சியினரிடம் ஆதரவு திரட்ட குடியரசு தலைவர் வேட்பாளர் திரவுபதி முர்மு இன்று காலை புதுச்சேரிக்கு வருகை தந்தார். 

அங்கு கூட்டணி கட்சி தலைவரான முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி கூட்டம் நடக்கிறது. இதில் அமைச்சர்கள், கூட்டணி கட்சிகளான என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளும் ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு கூட்டணி கட்சியினரிடம் ஆதரவு திரட்டினார். இதனைத்தொடர்ந்து கூட்டம் முடிந்ததும் புதுவையில் இருந்து புறப்பட்டு சென்னை செல்ல உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

President candidate Draupadi Murmu meet Pudhuchery chief minister Rangaswamy


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->