மக்களை பிளவுபடுத்தும் பிரிவினையை தேமுதிக ஏற்காது.! - கொந்தளிக்கும் பிரேமலதா.!! - Seithipunal
Seithipunal


மத்திய பாஜக அரசால் கடந்த 2019 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திருத்தப்பட்ட குடியுரிமை சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்ற தேர்தலை மனத்தில் வைத்துக்கொண்டு பாஜக அரசு அமல்படுத்தவில்லை.

இந்நிலையில் நேற்று திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் அமலுக்கு வருவதாக மத்திய பாஜக அரசு அறிவித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து சட்டத்தை அமல்படுத்தியதாக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா "மதத்தால், மொழியால், சாதியால், உணர்வால் சகோதர சகோதரிகளாக, ஒற்றுமையாக இணைந்து மற்ற நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக நம் நாடு திகழும் நிலையில் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் மூலம் மக்களை பிளவுபடுத்தி பிரிவினையை ஏற்படுத்துவதை, தேமுதிக ஏற்காது" என தனது எதிர்ப்பை பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Premalatha opposed CAA act


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->