தமிழர்கள் நன்றி மறந்தவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன் சாடல்! - Seithipunal
Seithipunal


உலகிலேயே மிகவும் பழமையான மொழி தமிழ் என பிரதமர் மோடி பலமுறை கூறியுள்ளதாக, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சுதந்திர போராட்ட வீரர் ராமசாமி படையாச்சியாரின் 102ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு பொன்.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்கள்  மத்தியில் பேசிய அவர், கழுகு எங்கு பறந்தாலும் பார்வை பிணத்தின் மீது என்பது போல் தமிழை வைத்து பிழைப்பு நடத்துகின்றனர். சமஸ்கிருதத்தை விட தமிழ் பழமையான மொழி என பிரதமர் மோடி கூறியதை தமிழக தலைவர்கள் ஏன் கொண்டாட மறுக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், பிற மொழி பேசும் மாநிலத்தில் இருப்பவர்கள் நூறு தமிழ் வார்த்தை கற்க வேண்டும் என கூறியவர் பிரதமர் மோடி என்றும் அதை கொண்டாடத் தெரியாதவன் தமிழன், நன்றி மறந்தவன் தமிழன் என பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்.

மேலும், தமிழக பாஜக தலைவர் யார் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pon.radhakrishnan press meet


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->