வாரிசு அரசியலை பற்றி பேச தகுதி இல்லை..!! சி.வி சண்முகத்தின் அப்பா யார் தெரியுமா..!! அமைச்சர் பொன்முடியின் அதிரடி பதில்..!! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டத்தை அடுத்து விக்கிரவாண்டி பேருந்து நிலையம் எதிரில் நேற்று அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி சண்முகம் தலைமையில் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய மாநிலங்களவை உறுப்பினர் சி.வி சண்முகம் ஜனநாயக நாட்டில் மன்னர் ஆட்சிபோல் திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. தாத்தா, பிள்ளை, பேரன் என தமிழ்நாட்டை ஆட்சி செய்கின்றனர். இதுதான் திராவிட மாடல் ஆட்சியா..?? என கேள்வி எழுப்பி இருந்தார்.

சி.வி சண்முகத்தின் இந்த பேச்சிற்கு அமைச்சர் பொன்முடி பதிலடி தந்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் "இளைஞர் அணி தலைவராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் தமிழக முழுவதும் 25 லட்சம் உறுப்பினர்களை திமுகவில் சேர்ந்துள்ளார். உதயநிதியை அமைச்சர் ஆக்கியது தான் இப்பொழுது பலருக்கும் பிரச்சனை. விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு முன்னாள் அமைச்சர் இருக்கிறார்.

எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் குடும்பத்தில் இருந்து யாராவது வந்திருக்கிறார்களா என பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் சி.வி சண்முகத்திற்கு வரலாறு தெரியவில்லை. முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் உயிரிழந்த உடன் அவருடைய மனைவி ஜானகி எம்.ஜி.ஆர் முதல்வராக பதவியேற்றார். இது வாரிசு அரசியல் இல்லையா..?? 

முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகத்தின் அப்பா ஒரு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர். அதன் காரணமாகவே சி.வி சண்முகத்திற்கு கட்சியில் இடமும் சீட்டும் கிடைத்தது. அவ்வாறு இருக்கும் பொழுது இவரெல்லாம் வாரிசு அரசியல் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது..?? 

வாரிசுகளாக இருந்தாலும் கட்சிப் பணிகளை ஆரம்பம் முதலே ஈடுபட்டால் மட்டும் திராவிட கொள்கை உணர்வு இருக்கும். அப்படி சிறு வயதில் இருந்து பணியாற்றியவர் தான் உதயநிதி. உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர்கள் மீது நிறைய அக்கறை உள்ளது" என சி.வி சண்முகத்திற்கு அமைச்சர் பொன்முடி பதிலடி தந்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ponmudi critized CV Shanmugam not qualified talk about succession politics


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->