தேர்தல் நெருக்கத்தில் அரசியல் அதிரடி…!- வைத்திலிங்கம் தி.மு.க.வில் இணையப் போகிறாரா...?
Political shocker election approaches Is Vaithilingam going join DMK
தமிழக அரசியல் மேடையில் தேர்தல் சூடு நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், ஏப்ரல் மாதத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. தேர்தலுக்கான காலக்கெடு நெருங்கி வரும் சூழலில், அரசியல் கட்சிகள் அனைத்தும் முழுவீச்சில் தேர்தல் மோடுக்கு மாறியுள்ளன.
மேலும், பிரசார வாகனங்கள், பொதுக்கூட்டங்கள், கூட்டணி கணக்குகள், தொகுதி பங்கீட்டு யோசனைகள், நலத்திட்ட அறிவிப்புகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைகள் என, அரசியல் அரங்கம் முழுவதும் தேர்தல் பரபரப்பால் நிரம்பியுள்ளது.

ஒவ்வொரு கட்சியும் அதிகாரப் போட்டியில் முன்னிலை பெற, வியூகங்களை கூர்மையாக்கி வருகிறது.இந்த பரபரப்பான பின்னணியில், ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான ‘அ.தி.மு.க. தொண்டர்கள் மீட்புக் குழு’வில் இடம்பெற்றிருந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், அரசியல் பாதையை மாற்றிக் கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஒரத்தநாடு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான வான வைத்திலிங்கம், இன்று தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து, ஆளும் கட்சியான தி.மு.க.வில் இணைய உள்ளார் என அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
இந்த தகவலின்படி, இன்று காலை 10.45 மணிக்கு முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலினை சந்தித்து, அவர் முன்னிலையில் வைத்திலிங்கம் தி.மு.க.வில் அதிகாரப்பூர்வமாக இணைவார் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த திடீர் அரசியல் திருப்பம், தமிழக அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி, வரவிருக்கும் தேர்தல் சமன்பாடுகளில் புதிய மாற்றங்களை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.தமிழக அரசியல்… இப்போது மீண்டும் புதிய திருப்பத்தின் முனையில் நிற்கிறது.
English Summary
Political shocker election approaches Is Vaithilingam going join DMK