#சென்னை || ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொண்டு வாக்கு சேகரித்த பாமக பெண் வேட்பாளர்.! - Seithipunal
Seithipunal


நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், சென்னை மாநகராட்சியில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியின் பெண் வேட்பாளர் ஒருவர், ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொண்டு வாக்கு சேகரித்தார்.

நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், பாட்டாளி மக்கள் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. சென்னை மாநகராட்சியில் உள்ள 200 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் களம் இறக்கி, தீவிரமாக தங்களது வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றது.

இந்த நிலையில், சென்னை மாநகராட்சியின் 95 வது வார்டில் போட்டியிடும் பாமக பெண் வேட்பாளர் ஒருவர், ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அண்ணாநகரில் இருக்கக்கூடிய ஜிம் ஒன்றில், இன்று வாக்கு சேகரிக்க சென்ற பாமக பெண் வேட்பாளர்,  அங்கு உடற்பயிற்சி மேற்கொண்டிருந்தவர்களிடம் வாக்கு சேகரித்தார்.

மேலும், வில்லிவாக்கம் பகுதியில் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அப்போது, தேர்தல் வாக்குறுதியாக பெண்களுக்கு என்று இந்த பகுதியில் உடற்பயிற்சி கூடம் அமைத்து தரப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், மாநகராட்சி சார்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் உடற்பயிற்சிக் கூடங்கள் அனைத்தும் சீரமைத்து தரப்படும் என்று தேர்தல் வாக்குறுதியாக அளித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pmk women candidate election campaign in Gym


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->